Search
Tuesday 20 February 2018
  • :
  • :

தமிழுக்கு வரும் சன்னிலியோனின் கவர்ச்சி படம்…

தமிழுக்கு வரும் சன்னிலியோனின் கவர்ச்சி படம்…

இந்தியத் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சுமார் 100 கோடிக்கு  மேல் வசூலை வாரிக் குவித்த    ராகினி எம்.

எம்.எஸ் 2  என்ற ஹிந்தி படத்தை ராத்ரி  என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறது.

பிரபல இந்தி நடிகரான ஜிதேந்திராவின் படத்தயாரிப்பு நிறுவனமான இது, தொலைக்காட்சி தொடர் தயாரிப்பிலும் முன்னணியில் இருக்கிறது.

ராத்ரி படத்தில் கதாநாயகியாக உலகப்புகழ் பெற்ற நீலப்பட நடிகையும் தற்போதைய பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையுமான  சன்னி லியோன் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் கவர்ச்சி விருந்து படைத்திருப்பதுடன், பயங்கரமான பேயாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார் சன்னி லியோன்.

சாமுராய் படத்தில் விக்ரம் உடன் நடித்த  அனிதா, பர்வீன் தபாஸ் , சந்தியா மிருதுல், கரண் தாலுஜா உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் சன்னி லியோன் நடனமாடிய “ பேபி டால் “ என்ற சூப்பர் ஹிட் பாடலை இதுவரை சுமார் 8 கோடி பேர்  யூடியூப்பில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

ராத்ரி படத்தின் வசனங்களையும், பாடல்களையும் ஆதிராஜன் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு…  தெறி தெறிக்கப் பார்த்தா ஜின்னு…  என்று தொடங்கும்  பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். மற்றொரு பாடலை பாலாஜிஸ்ரீ பாடியுள்ளார்.

ஒரு பேய் பங்களாவுக்கு படப் பிடிப்புக்கு செல்லும் படக்குழுவினர் அங்கிருக்கும் பேயால் எப்படி பாதிக்கப் படுகின்றனர் என்பதுதான் கதை.

பல கோடி ரூபாய் செலவில் திகில் காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருக்கின்றன.

கவர்ச்சி காட்சிகளிலும், திகில் காட்சிகளிலும் ரசிகர்களை மிரட்டப் போகும் சன்னி லியோனின்  ராத்ரி விரைவில் திரைக்கு வருகிறது.

ஷோபா கபூர், ஏக்தா கபூர் ஆகியோர் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better