Search
Wednesday 26 September 2018
  • :
  • :

சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு-2

சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு-2

சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார்.

கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை – 2, ஐந்தாம் படை மற்றும் மீசைய முறுக்கு ஆகிய படங்களை தயாரித்த குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்ஸ் தற்போது கலகலப்பு -2 படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அக்டோபர் 4 –ஆம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று வந்தது.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு  காசியில் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கலகலப்பு – 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.

முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து படமாக வசூல் சாதனை படைத்தது.

தற்போது இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கும் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எழுத்து – இயக்கம் – சுந்தர்.சி.

திரைக்கதை – வேங்கட்ராகவன்

தயாரிப்பாளர் – குஷ்பு சுந்தர்

ஒளிப்பதிவு – யூகேஎஸ்

வசனம் – பத்ரி

இசை – ஹிப் ஹாப் ஆதி

பாடல் – மோகன் ராஜ்

படத்தொகுப்பு – ஸ்ரீ காந்த்

கலை – பொன்ராஜ்

சண்டைப் பயிற்சி – தினேஷ்

நடனம் – ஷோபி, பிருந்தா




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better