Search
Monday 16 July 2018
  • :
  • :

சிருஷ்டி டாங்கேயிடம் அரைடஜன் படங்கள் கைவசம்…!

சிருஷ்டி டாங்கேயிடம் அரைடஜன் படங்கள் கைவசம்…!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக நடித்த படம் – ‘யுத்தம் செய்’.
இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.
‘யுத்தம் செய்’ படத்தை தொடர்ந்து  தமிழில் படங்கள் இல்லாமல் தெலுங்குப் பக்கம் போய்விட்டு மீண்டும் கோடம்பாக்கம் வந்தது ‘மேகா’ படத்தின் மூலம்.
இளையராஜா இசையமைத்தும் இந்தப்படம் ஓடவில்லை.
அதே நேரம், ரசிகர்களின் பார்வையை சிருஷ்டி டாங்கே மீது திருப்ப வைத்தது.
அதோடு, யார் இந்த கன்னக்குழி அழகி என்று அனைவரையும் பேசவைத்தது.
அதன்பின்னர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘டார்லிங்’, சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’, பாடகர் கிரிஷ் நடித்த ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என வரிசையாக இவரது படங்கள் வெளிவந்தன.
தற்போது சிருஷ்டி டாங்கே இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ‘வில் அம்பு’ படத்திலும், நடிகர் நரேனுடன் ‘கத்துக்குட்டி’ படத்திலும், டி.வி. தொகுப்பாளர் ம.க.பா ஆனந்துடன் ‘நவரசத் திலகம்’, விஜய் வசந்துடன் ‘அச்சமின்றி’ மற்றும் பிரசன்னா – கலையரசன் சேர்ந்து நடிக்கும் இதுவரை பெயர் சூட்டப்படாத ஒரு திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.
தமிழில் இத்தனை படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு பி.ஆர்.ஓ.வையும் தற்போது நியமித்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே.



Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better