Search
Sunday 24 February 2019
  • :
  • :

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’… – அவ்வை சண்முகியா? ஆணழகனா?

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’… – அவ்வை சண்முகியா? ஆணழகனா?

‘ரஜினிமுருகன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் – ரெமோ.
சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

பாண்டிராஜின் உதவியாளரான புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
ரஜினி முருகன் படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்திலும் கதாநாயகி.
இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்துக்கு தலைப்பு வைக்காமலே இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி பின்னர்  சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று படத்தின் பெயர் ‘ரெமோ’ என்று அறிவிக்கப்பட்டது.
ரெமோ என்ற தலைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, இப்படத்தின் பெயர் நர்ஸ் அக்கா என்றே சொல்லப்பட்டு வந்தது.

தலைப்புக்கு ஏற்ப இப்படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதற்காக வெளிநாட்டு மேக்கப்மேனை வரவழைத்துள்ளனார்.

கடந்தகாலங்களில் தமிழ்சினிமாவில் பெண் வேடம் போடாத நடிகர்களே இல்லை. போண்டா மணி  கூட ஏதோ ஒரு படத்தில் பெண் வேடம் போட்டதாக ஞாபகம்.

எத்தனை ஹீரோக்கள் பெண் வேடம் போட்டால் என்ன?

அவ்வை சண்முகி படத்தில் கமல் ஏற்ற மாமி கேரக்டர் மட்டுமே தத்ரூபமாக இருந்தது.
இது ஒரு பக்கம் இருக்க, ஹீரோக்கள் பெண் வேடம் போட்ட படங்கள் ஓடாது என்ற மூடநம்பிக்கையும் திரையுலகில் நிலவுகிறது.

இதை மெய்ப்பிக்க சில படங்களை பட்டியலும் போடுகின்றனர் திரையுலகப் பண்டிதர்கள்.
பல வருடங்களுக்கு முன் பிரசாந்த் நடித்த ஆணழகன் படமும் அந்தப் பட்டியலில் உள்ளது.

முன்னணி ஹீரோவாக பிசியாக இருந்த பிரசாந்த், ஆணழகன் படத்தில் பெண் வேடத்தில் நடித்த பிறகே மார்க்கெட் இழந்தார்.

சிவகார்த்திகேயன்  பெண் வேடம் போட்ட ரெமோ படம் எப்படி இருக்கப்போகிறது என்று தெரியவில்லை.

‘ரெமோ’… – அவ்வை சண்முகியா? ஆணழகனா?

மே மாதம் தெரிந்துவிடும்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better