Search
Friday 19 October 2018
  • :
  • :

சீமராஜாவுக்கு சிக்கல் வருமா?

சீமராஜாவுக்கு சிக்கல் வருமா?

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீம ராஜா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆயுத பூஜை தொடர்விடுமுறையை கணக்குப்போட்டு செப்டம்பர் 13-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் படத்தை தணிக்கை செய்து தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்து அவர்கள் ஒப்புதல் கொடுத்த பிறகே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும். ஆனால் போஸ்ட் புரடக்ஷன் நடைபெற்று வரும்போதே சீமராஜா ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

இதைக்கண்ட சில தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் கவுன்சிலுக்குக் கொண்டு சென்று தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கவுன்சில் ஒப்புதல் கொடுக்காமல் யாரும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர் கவுன்சில் நிர்வாகிகள்.

இந்த சர்ச்சை காரணமாக சீமராஜா வெளியாகும்போது சக தயாரிப்பாளர்களால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better