Search
Saturday 20 October 2018
  • :
  • :

அன்று 2 லட்சம், இன்று 2 கோடி

அன்று 2 லட்சம், இன்று 2 கோடி

மெரீனா, மனம் கொத்திப்பறவை, வருத்தப்படா வாலிபர் சங்கம் வரை இரண்டாம்நிலை கதாநாயகிகளுடன் நடித்த சிவகார்த்திகேயன் தன்னை ஸ்டாராக உயர்த்திக் கொள்ளும் திட்டத்தில், அதன் பிறகு ஹன்சிகா, நயன்தாரா, என்று முன்னணி நடிகைகளை தனக்கு ஜோடியாக்கிக் கொள்ள ஆரம்பித்தார்.

அதுவே அவரை முன்னணி ஹீரோ இடத்துக்கு அழைத்து வந்தது.

இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்கள் கதாநாயகிகளாக நடித்தனர்.

இப்போது ரகுல் ப்ரீத் சிங்கும் சிவகார்த்திகேயனுடன் இணையவிருக்கிறார்.

பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திக்யேன் அடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கும் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தையும் தன்னுடைய நண்பர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் தொடங்கிய 24AM STUDIOS நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

‘சீமராஜா’வின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரகுல் ப்ரீத்சிங்குக்கு 2 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் டிவி நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் நடித்தபோது ரகுலுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 2 லட்சம்.

கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்த ரகுல் ப்ரீத்சிங் இப்போது சூர்யாவுடன், செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better