Search
Tuesday 24 April 2018
  • :
  • :

சிவாஜி பேரனின் படத்தில், சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்…!

சிவாஜி பேரனின் படத்தில், சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்…!

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் படம் மீன் குழம்பும் மண் பானையும்.

இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இது சிவாஜி கணேசன் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே சாத்தியமானதாக மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பி இருக்கும் மீன் குழம்பும் மண்பானையும் பட இயக்குநர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் இத்திரைப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஜெ.லக்ஷ்மண் குமாரும், படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவினும் கலையை  எம்.பிரபாகரனும், கள தயாரிப்பை ஆர்.எஸ்.சிவாஜியும்   கவனிக்கிறார்கள்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better