Search
Sunday 18 November 2018
  • :
  • :

சிவகார்த்திகேயனுக்கு எதிராக விஜய்சேதுபதி…! தனுஷின் மாஸ்டர் ப்ளான்…!

சிவகார்த்திகேயனுக்கு எதிராக விஜய்சேதுபதி…! தனுஷின் மாஸ்டர் ப்ளான்…!

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாவது உறுதி என தகவல் அடிபடுகிறது.

லிங்குசாமி தயாரித்த இந்தப்படத்தை, அவர் தர வேண்டிய கடனுக்கு ஈடாக ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா எழுதி வாங்கிக் கொண்டுவிட்டதாகவும், அவரே உலகம் முழுக்க ‘ரஜினி முருகன்’ படத்தை வெளியிட உள்ளார் என்றும் படத்துறையில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ படம் வெளியாகும் அதே நாளில், தன்னுடைய ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் தனுஷ்.

‘போடா போடி’ இயக்குநரும் நயன்தாராவின் புதிய காதலருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் மீது தனுஷ் ஏதோவொரு வருத்தத்தில் இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் உலவுகின்றன.

அதை நாகரிகம் கருதி இருவரும் மறுத்தாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் இருவருக்குமான மனக்கசப்பு வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் விழாவுக்கு வந்த தனுஷ், சிவகார்த்திகேயன் வந்தபோது காணாமல்போனது, சிவகார்த்திகேயனின் போட்டியாளரான விஜய்சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடி’ தான் படம் தயாரித்தது என தனுஷ் – சிவகார்த்திகேயன் மனக்கசப்புக்கு பல சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுவரும்நிலையில்.

தற்போது இன்னொரு சம்பவம்..

சிவகார்த்திகேயன் நடித்த படம் வெளியாகும் அதே தினத்தில் தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படம் வெளியாவதன் மூலம் இருவருக்கும் இடையில் உள்ள மனக்கசப்பு வெட்டவெளிச்சமாகி உள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி அன்று வுண்டர்பார் ஃபிலிம்ஸின் இன்னொரு தயாரிப்பான தனுஷ் நடித்த ‘விஜபி 2’ படத்தையே வெளியிட முதலில் தனுஷ் திட்டமிட்டிருந்தாராம்.

அப்படி ரிலீஸ் செய்தால் சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் உள்ள மோதல் மீடியாக்களில் பரபரப்பு செய்தியாகிவிடும் என்பதால், விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தை களத்தில் இறக்க முடிவு செய்தாராம் தனுஷ்.

அக்டோபர் 2 ஆம் தேதி அன்று ‘நானும் ரௌடிதான்’ படத்தை வெளியிட்ட பிறகு சில வாரங்கள் கழித்து ‘விஐபி 2’ படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better