Search
Tuesday 20 November 2018
  • :
  • :

தர்புகா சிவாவின் அடுத்த முயற்சி…

தர்புகா சிவாவின் அடுத்த முயற்சி…

ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் தர்புகா சிவா.

பின்னர் ராஜதந்திரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து ‘மோ’, ‘தொடரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதற்குப் பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இசையமைப்பதில் ஆர்வம் காட்டினார்.

அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட சசிகுமார் தான் நடித்த ‘கிடாரி’, ‘பலே வெள்ளையத்தேவா’ படங்களில் தர்புகாசிவாவை இசையமைப்பாளராக்கினார்.

தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

அதற்கு முன்னதாக தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் தர்புகா சிவா.

இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிக்க இருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better