Search
Sunday 20 May 2018
  • :
  • :

சென்சாரில் சிக்கல் வராமல் இருக்க டிப்ஸ் கொடுத்த நடிகர்

சென்சாரில் சிக்கல் வராமல் இருக்க டிப்ஸ் கொடுத்த நடிகர்

ஜீவா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான சிவா மனசுல சக்தி படம் வெற்றியடைந்தது. எஸ்.எம்.எஸ். என்று சுருக்கமாக குறிப்பிடப்பட்ட அந்தப் படத்தின் சாயலில் ‘சிவா மனசுல புஷ்பா’ என்ற பெயரில் தற்போது ஒரு படம் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தின் விளம்பர போஸ்டர்களில் பாராளுமன்ற கட்டிடம் இடம்பெற்றுள்ளதை வைத்தே இது சர்ச்சைக்குரிய அரசியல்படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக புதுமுகம் வாராகி நடிக்கிறார்.

ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய அருந்தவராஜா திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

‘சிவா மனசுல புஷ்பா’ படம் குறித்து வாராகியிடம் கேட்டால், “இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு. நிஜத்தில் நடந்தவை.

ஒருவருக்கொருவர் இரு எதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இந்தக் கதையில் இடம்பெறுகிறது.

படம் வெளியாகும்போது தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும்” என்கிறார்.

டெல்லி ஏர்போர்ட்டில் திருச்சி சிவா எம்.பி.யை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த காட்சி சிவா மனசுல புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.

இந்தக்காட்சி மட்டுமல்ல, திருச்சி சிவா, சசிகலா புஷ்பா தொடர்பான வேறுபல சம்பவங்களும் இந்தப்படத்தில் காட்சிகளாக்கப்பட்டிருக்கின்றன.

இதன் காரணமாக சிவா மனசுல புஷ்பா படத்துக்கு கோர்ட்டில் சம்மந்தப்பட்டவர்கள் தடை வாங்கிவிட வாய்ப்புள்ளது என்பதால், சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நடிகர் ஒருவர் வாராகிக்கு சில டிப்ஸ்களை கொடுத்திருக்கிறாராம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better