Search
Tuesday 21 August 2018
  • :
  • :

கடைசி நேரத்தில் கழுத்தறுத்த ஸ்ருதிஹாசன்…! சிவகார்த்திகேயன் அதிர்ச்சி…!

கடைசி நேரத்தில் கழுத்தறுத்த ஸ்ருதிஹாசன்…! சிவகார்த்திகேயன் அதிர்ச்சி…!

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா தனது ’24 AM Studios’ என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஆபிஸ் பூஜை போட்டதோடு சரி.

அதன் பிறகு அப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை.

பால்கி இயக்கும் ஹிந்திப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அந்தப் படத்தை முடித்துவிட்டு வந்த பிறகே அதாவது நவம்பர் மாதம்தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் துவங்கும் என்பதே லேட்டஸ்ட் தகவல்.

அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.

அனிருத் இசை அமைக்கும் இந்த படத்திற்கு சவுண்ட் டிசைனிங் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஏற்றிருக்கிறார்.

‘புலி’ படத்துக்கு கலை இயக்குநராக பணியாற்றிய முத்துராஜ் இப்படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார்.

இயக்குநர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இப்போது கதாநாயகி முடிவாகி விட்டது.

பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் ஸ்ருதிஹாசனை கமிட் பண்ணினார்கள்.

படப்பிடிப்புக்கு சில நாட்களே இருந்தநிலையில் கடைசிநேரத்தில் கழுத்தை அறுத்த கதையாக சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்துவிட்டார் ஸ்ருதிஹாசன்.

எனவே, வேறு வழியில்லாமல், ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷை இப்படத்தின் கதாநாயகியாக கமிட் பண்ணிவிட்டனர்!

ஸ்ருதிஹாசனின் கடைசி நேர கழுத்தறுப்புக்கு காரணம் என்ன?

மதுரை சம்பவத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better