Search
Thursday 18 October 2018
  • :
  • :

சிவகார்த்திகேயன் மீது தனுஷுக்கு என்ன கோபம்…?

சிவகார்த்திகேயன் மீது தனுஷுக்கு என்ன கோபம்…?

நட்புக்கும் நன்றியுணர்ச்சிக்கும் அர்த்தம் தெரியாதவர்கள் அதிகளவில் நிறைந்திருக்கும் ஏரியா திரைப்படத்துறைதான்.

இதற்கு கடந்தகாலங்களில் எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.

நிகழ்காலத்திலும் இப்படிப்பட்ட உதாரண சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

நேற்றுவரை நண்பர்களாக இருந்த சிவகார்த்திகேயனுக்கும்…. தனுஷுக்கும் இடையில் ‘காக்கிச்சட்டை’ படத்துக்குப் பிறகு மனக்கசப்பு.

சந்தானத்தின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் அவருக்கு போட்டியாக சிவகார்த்திகேயனை ‘3’ படத்தில் காமெடியனாக அறிமுகப்படுத்தினார் தனுஷ்.

அந்த நன்றிக்கடனுக்காக ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ என இரண்டு படங்களில் நடித்துக் கொடுத்தார்.

அதன் பிறகும் அடிமாட்டு சம்பளத்துக்கு சிவகார்த்திகேயன் தனக்கு கால்ஷீட் தர வேண்டும் என்று எதிர்பார்த்தார் தனுஷ்.

சிவகார்த்திகேயனோ தன் பாதையில் நடைபோட ஆரம்பித்தார்.

அதனால் கடுப்பான தனுஷ், சிவகார்த்திகேயனை தன் எதிரியாக எண்ண ஆரம்பித்துவிட்டார்.

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாளராக கருதப்படும் விஜய்சேதுபதியை அழைத்து தன் பேனரில் நடிக்க வைத்ததோடு, நயன்தாராவையும் அவருக்கு ஜோடியாக்கினார்.

அதுமட்டுமல்ல, வேறு பல வழிகளிலும் சிவகார்த்திகேயனை எரிச்சல் படுத்தி வந்த தனுஷ், கடந்த மாதம் ‘ரஜினி முருகன்’ படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட அதே தேதியில் தன்னுடைய ‘நானும் ரௌடிதான்’ படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கினார்.

அன்றைய தேதியில் ‘ரஜினி முருகன்’ வெளியாகவில்லை. தனுஷும் அமைதியாகிவிட்டார்.

இந்நிலையில் அக்டோபர் 21 அன்று ‘ரஜினி முருகன்’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதை அறிந்த தனுஷ், அதே தேதியில் தான் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தை வெளியிடவும் தீர்மானித்திருக்கிறாராம்.

சிவகார்த்திகேயன் படம் வெளியாகும் அதே தேதியில் விஜய்சேதுபதி படத்தை வெளியிட்டால் மக்கள் விஜய்சேதுபதி படத்தைப் பார்க்க தியேட்டரை நோக்கி திரண்டு வந்துவிடுவார்கள் என்பது தனுஷ் போடும் கணக்கு.

‘ஆரஞ்சுமிட்டாய்’ படம் பார்த்த பிறகும் விஜய்சேதுபதி படத்தைப் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வருவாங்களா?

தனுஷ் தம்பி, தமாஷ் பார்ட்டியா இருப்பார் போலருக்கே…!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better