Search
Friday 22 February 2019
  • :
  • :

சின்னத்திரைக்கு இசையமைக்கும் சிற்பி

சின்னத்திரைக்கு இசையமைக்கும் சிற்பி

ராதிகா இரண்டு வேடங்களில் நடிக்க 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘வாணி ராணி’ சீரியல், 1700 எபிசேடுகளைக் கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.

அதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக ‘சந்திரகுமாரி’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிவிட்டார் ராதிகா.

சரித்திரமும் சமூகமும் மாறி மாறிப் பயணிக்கும் வித்தியாசமான சீரியலாக இது உருவாகி வருகிற இந்த சீரியலில், 7 வேடங்களில் நடிக்கிறார் ராதிகா.

சென்னை மற்றும் மும்பையில் மிகப்பெரிய செட்டுகள் போட்டு இந்த சீரியலின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அரச குடும்பம் சார்ந்த கதையை, ‘பாட்ஷா’ படத்தின் இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நிகழ்காலக் காட்சிகளை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார்.

‘தாமிரபரணி’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்த பானு, இதில் ராதிகாவின் மகளாக நடிக்கிறார். நிரோஷா, உமா ரியாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த சீரியலுக்கு சிற்பி இசையமைக்கிறார்.

ஒருகாலத்தில் நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் சிற்பி.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better