Search
Sunday 19 August 2018
  • :
  • :

சிம்புவுக்கு எதிராக களத்தில் இறங்கிய கார்த்தி…!

சிம்புவுக்கு எதிராக களத்தில் இறங்கிய கார்த்தி…!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.

வழக்கமாக தேர்தல் நடைபெறும்போது பெரிய பரபரப்பு இருக்காது.

அந்தளவுக்கு நடிகர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவியது.

சரத்குமாரையும் ராதாரவியையும் எதிர்க்கும் விஷால் தனக்குப் பின்னால் சிலரை திரட்டி இந்த வருட தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

எனவே இம்முறை கடும் போட்டி இருக்கும் என்பது உறுதி.

இந்த தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட உள்ள நடிகர் விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணி கமல், ரஜினி உட்பட பல முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் போட்டியிடுகிறார் நடிகர் சிம்பு.

சரத்குமார், ராதாரவி அணியில் நீண்ட வருடங்களாக நடிகர் சங்கத்தின் கமிட்டி மெம்பராக இருந்துவருகிறார் சிம்பு.

எனவே, இந்த வருட தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு சிம்புவை போட்டியிட வைக்க தீர்மானித்துள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் தற்போதைய தலைவர் சரத்குமார் இதை அறிவித்தார்.

இதனை நடிகர் சிம்புவும் உறுதி செய்துள்ளார்.

சிம்பு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை ஏற்கனவே தெரிந்து வைத்துள்ள விஷால் அணியினர், அவரை எதிர்த்து கார்த்தியை களத்தில் இறக்க தீர்மானித்துள்ளனர்.

முன்னணி நடிகர்கள் போட்டிக்களத்தில் இருப்பதால் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சூடுபிடித்துள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better