Search
Sunday 24 February 2019
  • :
  • :

பிடிவாதத்தினால் பட வாய்ப்பை இழந்த சிம்பு

பிடிவாதத்தினால் பட வாய்ப்பை இழந்த சிம்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் இளம் ஹீரோ ஒருவர் நடிப்பதாக செய்திகள் வந்தது.

அந்த வேடத்தில் நடிக்க சிம்புவை அணுகியதாக சொல்லப்பட்டது.

கடைசி நேரத்தில் சிம்புவுக்குப் பதில் சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்தியன் 2 படத்தில் சிம்பு ஏன் நடிக்கவில்லை என்று விசாரித்தபோது, கிடைத்த தகவல்தான் இது.

சிம்பு கடைசியாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 8 கோடிதான். ஆனால் அவரோ தன்னுடைய அடுத்த படத்துக்கு 15 கோடி சம்பளம் என்று ஃபிக்ஸ் பண்ணிக்கொண்டார்.

இந்தியன் 2 படத்தில் அவருக்கு வெறும் 30 நாட்கள்தான் வேலை. தவிர அந்தப்படத்தில் அவர் ஹீரோ இல்லை. இந்த யதார்த்தம் புரியாமல் 15 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் சிம்பு.

லைகா நிறுவனமோ 6 கோடி தருவதாக சொன்னது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 கோடிக்கு இறங்கி வந்திருக்கிறார் சிம்பு.

லைகா நிறுவனம் 6 கோடிக்கு மேல் ஒரு பைசா தர மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தது.

இந்த இழுபறி காரணமாகவே ஷங்கரின் ஆலோசனைப்படி சிம்பு வேண்டாம் என்று முடிவெடுத்து சித்தார்த்தை கமிட் பண்ணிவிட்டனர்.

வாங்கினா 15 கோடி சம்பளம்தான் வாங்குவேன் என்ற பிடிவாதத்தினால் இந்தியன்2 பட வாய்ப்பை இழந்துவிட்டு நிற்கிறார் சிம்பு.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better