Search
Sunday 23 September 2018
  • :
  • :

சிம்பு வேண்டாம் என்று தீர்மானித்த தயாரிப்பாளர்

சிம்பு வேண்டாம் என்று தீர்மானித்த தயாரிப்பாளர்

சிம்பு – ஹன்சிகா நடித்த ‘வாலு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய் சந்தர்.

சந்தானம், விடிவி கணேஷ் இருவரும் காமெடி வேடங்களில் நடித்த இந்தப் படம் பல வருடங்கள் முடங்கிக் கிடந்து பிறகு ஒருவழியாக 2015- ஆம் ஆண்டு ரிலீஸானது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கினார் விஜய்சந்தர்.

விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் ஸ்கெட்ச் படம், ரிலீஸானது.

இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்குகிறார் விஜய் சந்தர். இந்தப் படத்தை விஜய வாகிணி நிறுவனம் தயாரிக்கிறது. 2019 ஜனவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

இந்தப்படத்தில் முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. 10 கோடி சம்பளம் கேட்ட அதில் ஒரு பைசா குறைக்க மாட்டேன் என்று கறார் காட்டினார். எனவே சிம்பு வேண்டாம் என்று தீர்மானித்த தயாரிப்பாளர் விஜய்சேதுபதியை கமிட் பண்ணிவிட்டனர்.

இந்தப்படத்தில் நடிக்க விஜய்சேதுபதி வாங்கிய சம்பளம் 6 கோடி. படம் தயாரிப்பதற்கு முன்பே தயாரிப்பாளர்களுக்கு 4 கோடி மிச்சம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better