Search
Monday 23 July 2018
  • :
  • :

‘அதிரடி‘யாக கூட்டணி அமைத்த வெங்கட் பிரபு சிம்பு

‘அதிரடி‘யாக கூட்டணி அமைத்த வெங்கட் பிரபு சிம்பு

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் முதன்முறையாக சிம்பு மூன்று வேடங்களில் நடித்தாலும் அந்தப் படம் ஓடவில்லை.

அதன்பிறகு சிம்பு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தார்.

இந்தப்படத்தைத் தொடர்ந்து, நிறைய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள சிம்பு, ‘மன்மதன்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி நடிக்கப் போகிறார்.

ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப்படங்களுக்கு முன்னதாக, ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு.

இந்தப் படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better