Search
Thursday 13 December 2018
  • :
  • :

கார்த்திக் நரேன் இயக்கத்தில் சிம்பு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் சிம்பு

தயாரிப்பாளர்களை பாடாய்படுத்துகிற நடிகர்களில் முதலிடத்தில் இருந்தவர் சிம்பு.

அவரை வைத்து படம் எடுத்தவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்த கதை எல்லாம் நடந்திருக்கிறது.

அப்பேர்பட்ட சிம்புவிடம் இப்போது அநியாயத்துக்கு மாற்றம்.

மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் நடித்து முடித்து திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தினார் சிம்பு.

அடுத்து அரை டஜன் படங்களில் நடிக்க வாய்வழியாக ஒப்புதம் கொடுத்திருக்கிறார்.

அடுத்து சுரேஷ்காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில் ‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கி திரையிலகின் கவனத்தை ஈர்த்து, இப்போது ‘நரகாசூரன்’, ‘நாடகமேடை’ ஆகிய படங்களை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

அஜித் நடிப்பில் ‘வீரம்’, விஜய் நடிப்பில் ‘பைரவா’ முதலான படங்களை தயாரித்த பிரபல விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better