Search
Thursday 18 October 2018
  • :
  • :

சிம்புவின் விருப்பப்படி மாநாடு…

சிம்புவின் விருப்பப்படி மாநாடு…

வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘பார்ட்டி’ படத்தை தயாரிப்பாளர் இன்னும் ரிலீஸ் செய்யவில்லை. லைகாவிடம் படத்தை விற்றுவிட்டதால் ரிலீஸ் குறித்து தான் முடிவெடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

அதன் பிறகு லைகாவிடமிருந்து பார்ட்டி படத்தை திரும்பப்பெற்று தானே வெளியிடும் வேலைகளில் இறங்கிவிட்டார்.

பார்ட்டி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் வெங்கட் பிரபு.

சிம்புவும் வெங்கட்பிரபுவும் முதன் முறையாக இணையும் இந்த படத்தை அமைதிப்படை-2, ‘கங்காரு’ படங்களைத் தயாரித்தவரும், தற்போது, ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருபவருமான சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு முதலில் ‘அதிரடி’ என்று தலைப்பு வைக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்த தகவல் சமூகவலைதளங்களில் வெளியானநிலையில், இன்று இப்படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளனர். அதாவது மாநாடு என்ற தலைப்பை அறிவித்துள்ளனர்.

அதிரடி என்ற தலைப்பில் இது அரசியல் படம் என்பது வெளிப்படாது என்பதால் சிம்புவின் விருப்பத்தின்படி கடைசி நேரத்தில் மாநாடு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

எப்போதுமே தான் இயக்கும் படத்தை ரிலீஸ் செய்த பிறகே தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் வெங்கட் பிரபு.

சிம்பு படத்தின் மூலம் வெங்கட் பிரபுவும் புதியபாணிக்கு மாறியிருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better