Search
Sunday 21 October 2018
  • :
  • :

ஜார்ஜியாவுக்கு படை எடுக்கும் இயக்குநர்கள்!

ஜார்ஜியாவுக்கு படை எடுக்கும் இயக்குநர்கள்!

லைகா தயாரிப்பில் சுந்தர்.சி.இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான அட்டாரின்டிகி தாரடி என்ற படத்தின் ரீ-மேக்.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டடோபர் 1 ஆம் தேதி அன்று ஜார்ஜியா நாட்டில் துவங்குகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு வாரம் முன்னதாகவே அங்கு சென்றுவிட்ட படக்குழுவினர் இன்று முதல் படப்பிடிப்பை தொடங்கிவிட்டனர்.

தொடர்ந்து 45 நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். அதாவது படத்தின் 90 சதவிகித காட்சிகளை அங்கேயே படமாக்குகின்றனர்.

இதற்கு முன் ஜார்ஜியா நாட்டில் அஜித் நடித்த பில்லா-2, விஜய்சேதுபதி நடித்த ‘ஜுங்கா’, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள ‘துருவநட்சத்திரம்’ ஆகிய படங்களின் படபிடிப்புகள் நடைபெற்றுள்ளன.

இந்த படங்களை தொடர்ந்து இப்போது சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெறுகிறது.

கோலிவுட் இயக்குநர்களின் பார்வை ஜார்ஜியாவை நோக்கி திரும்பியது ஏன்? அங்கே செல்ல விசா பிரச்சனைகள் இல்லை. விசா வாங்காமல் அங்கே சென்ற பிறகு விசா பெறுகிறவகையில் அரைவல் விசா என்று சொல்லப்படுகிற சிஸ்டம் இருப்பதுதான் காரணம்.

அதோடு, அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டணம் கிடையாதாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better