Search
Wednesday 16 January 2019
  • :
  • :

நேரடியாக டிஜிட்டலில் வெளியாகும் 3 படங்கள்

நேரடியாக டிஜிட்டலில் வெளியாகும் 3 படங்கள்

கடந்த வருடம் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற கதிர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிகை.

கதிருடைய தயாரிப்பல் ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ள இந்த படத்தில் கதிர் பெண் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படம் தொடங்கப்பட்ட பிறகுதான் ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். சிகை படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியதால் முடங்கிப்போனது.

இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகாது என்றும் வருகிற பொங்கல் தினத்தன்று ஜீ தொலைக்காட்சி குழுமத்தின் இணையதளமான ‘ஜீ5’-ல் நேரடியாக ‘சிகை’ ரிலீஸாக இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள ஒரு பக்க கதை படமும் தியேட்டருக்கு வராமல் நேரடியாக டிஜிட்டலில் வெளியாக இருப்பதாக தகவல்.

இந்த இரண்டு படங்கள் புதுமுகங்களை வைத்து தவிர பிரபல மூன்று எழுத்து படநிறுவனம் தயாரித்த இன்னொரு படமும் நேரடியாக டிஜட்டலில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க, கதிர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘சத்ரு’ அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better