Search
Monday 21 January 2019
  • :
  • :

சிபி சத்யராஜுடன் இணையும் தன்யா ரவிச்சந்திரன்

சிபி சத்யராஜுடன் இணையும் தன்யா ரவிச்சந்திரன்

சிபி சத்யராஜ் நடித்த சத்யா படத்தை அடுத்து அவரது நடிப்பில் ‘ரங்கா’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிபி நடிக்கும் மற்றொரு படம் ‘மாயோன்’.

கிஷோர் இயக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.

இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தநிலையில் தான்யா ரவிச்சந்திரன் தேர்வாகியுள்ளார்.

சசிகுமாருடன் ‘பலே வெள்ளையத்தேவா’, அருள் நிதியுடன் ‘பிருந்தாவனம்’, விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள தான்யா ரவிச்சந்திரன், மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி.

சசிகுமார், விஜய்சேதுபதி, அருள்திநிதியைத் தொடர்ந்து தன்னுடைய நான்காவது படத்தில் சிபி சத்யராஜுடன் இணைந்திருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.

தேடி வரும் எல்லாப்படங்களையும் ஏற்காமல் கதை கேட்டு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better