Search
Monday 17 December 2018
  • :
  • :

ரங்காவை நம்பும் சிபிராஜ்

ரங்காவை நம்பும் சிபிராஜ்

நாய்கள் ஜாக்கிரதை படத்துக்குப் பிறகு சிபி ராஜ் நடித்த ஜாக்சன் துரை, கட்டப்பாவக் காணோம், போக்கிரிராஜா, சத்யா ஆகிய படங்கள் வணிகரீதியில் சரியாக ஓடவில்லை.

எனவே தற்போது அவர் நடித்து வரும் ரங்கா படத்தை பெரிதாக நம்பியிருக்கிறார்.

ரங்கா படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார்.

வினோத் டி.எல். இயக்கும் ‘ரங்கா’படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்பதை அண்மையில் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

ரங்கா என்ற தலைப்பு பற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா விளக்கம் அளித்துள்ளார்.

‘‘காக்கும் கடவுள் ரங்கநாதன். அதன் தொடர்புதான் இந்தப் படத்தின் டைட்டில்” என்று அவர் சொன்னாலும், அவர் சொல்லத ஒரு தகவல்… ரங்கா படத்தில் சிபிராஜின் கேரக்டர் பெயரும் ‘ரங்காதான்.

அதனாலேயே தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் அனுமதி பெற்று ரங்கா என்ற தலைப்பை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள ரங்கா படத்தில் சிபிராஜ், நிகிலா விமல் தவிர சதீஷ், ரேணுகா, ‘லொள்ளு சபா’ சுவாமி நாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better