Search
Sunday 19 August 2018
  • :
  • :

விஜயகாந்த் பெறாத வெற்றியை விஜய்சேதுபதி பெறுவரா?

விஜயகாந்த் பெறாத வெற்றியை விஜய்சேதுபதி பெறுவரா?

‘சூதுகவ்வும்’ படத்தில் ஒரு காட்சியில் போலியான போலீஸ் அதிகாரியாக நடித்தார் விஜய்சேதுபதி.

இப்போது ‘சேதுபதி’ என்ற படத்தில் கடமை தவறாத போலீஸ் அதிகாரியாகவே நடிக்கிறார்.

அதாவது இப்படத்தில் விஜய்சேதுபதி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல்துறை ஆய்வாளராக நடிக்கிறார்.

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

‘பண்ணையாரும் பத்மினியும்’ தோல்வியடைந்ததினால் அருண்குமாருக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் படம் இது.

‘சேதுபதி’ படத்தில் இயக்குநருக்கு மட்டுமல்ல, கதாநாயகியாக நடிக்கும் ரம்யா நம்பீசனுக்கும் மீண்டும் கைகொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்த ‘பீட்சா’ படத்தில் கதாநாயகியக ரம்யா நம்பீசன் நடித்தார். அந்தப்படம் வெற்றியடைந்தும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே ‘சேதுபதி’ படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி.

“இப்படம் காக்கி சட்டைக்கு உரிய கௌரவத்தை தரும் படமாக இருக்கும்“ என்கிற இயக்குனர் அருண்குமார் சேதுபதி படத்தை கமர்ஷியலாக வெற்றியடைய வைக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறாராம்.

சில வருடங்களுக்கு முன் பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் ‘சேதுபதி ஐ.பி.எஸ்.’ என்ற படம் வெளியானது.

அந்தப் படம் அப்போது பெரிய வெற்றியைப் பெறவில்லை.

விஜயகாந்தின் சேதுபதி பெறாத வெற்றியை விஜய்சேதுபதியின் ‘சேதுபதி’ பெறுமா?

பொறுத்திருந்து பார்க்கலாம்…




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better