Search
Monday 18 December 2017
  • :
  • :

சர்வர் சுந்தரம் படத்துக்கு சிக்கல்

சர்வர் சுந்தரம் படத்துக்கு சிக்கல்

காமெடியன் கதாநாயகன் ஆனால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது.

கடந்த காலங்களில் பல காமெடியன்கள் வாழ்வில் இப்படி நடந்திருக்கிறது.

இப்போது சந்தானம் வாழ்விலும் அதுவேதான் நடந்து கொண்டிருக்கிறது.

முன்னணி காமெடியனாக பல கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்து வந்த சந்தானத்துக்கு ஹீரோ ஆசை வந்ததும், காமெடியனாக நடிப்பதை விட்டுவிட்டு ஹீரோவாக ஆனார்.

அவர் ஹீரோவாக நடித்த எந்தப்படமும் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை.

படுதோல்வி… பரவாயில்லை என்கிற அளவிலேயே அவரது படங்களின் வசூல் நிலவரம் இருந்தது.

அதனால் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

எனவே தனக்கு வேண்டியவர்கள், நண்பர்களை தயாரிப்பாளராக்கி அவர்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடிப்பதன் மூலம் தன்னுடைய ஹீரோ அந்தஸ்த்தை தக்க வைத்து வருகிறார் சந்தானம்.

இந்நிலையில் அவர் தற்போது நடித்து முடித்துள்ள சர்வர் சுந்தரம் படமும் சிக்கலில் மாட்டியுள்ளது.

இப்படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை கேஆர் பிலிம்ஸ் வாங்கிக் கொள்வதாக அட்வான்ஸ் கொடுத்திருந்தது.

இதற்கிடையில் கேஆர் பிலிம்ஸ் வாங்கி வெளியிட்ட இறைவி, எங்கிட்ட மோதாதே, போங்கு ஆகிய படங்கள் படு தோல்வியடைந்ததால் பெரும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது கே.ஆர். பிலிம்ஸ்.

அதன் காரணமாக பாக்கி பணத்தைக் கொடுத்து சர்வர் சுந்தரம் படத்தை வெளியிட முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது. இந்த பஞ்சாயத்து காரணமாக சர்வர் சுந்தரம் படம் தற்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better