Search
Sunday 24 June 2018
  • :
  • :

ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் செல்வி

ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும்  செல்வி

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் – செல்வி.

பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான தெலுங்குப் படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டிருக்கிறது.

தெலுங்கில்  பாகு பங்காராம்  என்ற பெயரில் பிரம்மாண்டமாகத் தயாராகும் படமே  தற்போது செல்வி என்ற பெயரில் தமிழில்வெளியாகிறது.

பாகு பங்காராம் தெலுங்கில் வெளியாகவிருக்கும் அதே தினத்தில் அதாவது ஆகஸ்ட் 12 ம் தேதி  தமிழகத்தில் 150 திரையரங்குகளில் செல்வி படம் வெளியாகிறது.

இந்தப் படத்தில் போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார்.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

மற்றும் ஜெயபிரகாஷ், சம்பத், சௌகார்ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  ரிச்சர்ட் பிரசாத்

இசை   –  ஜிப்ரான்

எடிட்டிங்   –  திரிநாத்

பாடல்கள்   –  கருணாநிதி, கல்யாண்ஜி, அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம், மோகன்  SBI.

இயக்கம் –  மாருதி. இவர் ஏற்கனவே தெலுங்கில் 20 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அவை அனைத்துமே வெற்றிப் படங்கள்தானாம்.

இணை தயாரிப்பு  –  சத்யசீத்தால, வெங்கட்ராவ்

தயாரிப்பு   –  பத்ரகாளி பிரசாத்

செல்வி படத்துக்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஏஆர்.கே. ராஜராஜா.

செல்வி படம் பற்றி ராஜராஜாவிடம் படம் பற்றி கேட்டால்,

“ஏற்கனவே வெங்கடேஷ் – நயன்தாரா  லஷ்மி என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தையும் தமிழில் நான்தான் டப் பண்ணினேன்.  அதே காம்பினேஷனில் இப்போது பாகு பங்காராம் படம் உருவாகி இருக்கிறது. பாகு பங்காரம் என்றால் தம்பி தங்கமானவன் என்று அர்த்தம். அதையே இங்கு டைட்டிலாக வைக்காமல் நயன்தாராவை மனதில் வைத்து அவரது கேரக்டருடைய பெயரான செல்வி என்பதை டைட்டிலாக வைத்திருக்கோம்.  ஆக்ஷன், காமெடி, ஃபேமிலி சென்ட்டிமெண்ட் கதையாக செல்வி உருவாகி உள்ளது.” என்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better