Search
Saturday 21 July 2018
  • :
  • :

சீனுராமசாமிக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்த உதயநிதி

சீனுராமசாமிக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்த உதயநிதி

‘நிமிர்’ படத்தைத் தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரு கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

கண்ணே கலைமானே படம் சுமார் 10 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்தப் படத்தை இயக்கும் சீனுராமசாமிக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த சம்பளம் தவிர பிற மொழி ரைட்ஸ் விற்பனையில் 25 சதவிகிதமும் சீனுராமசாமிக்கு வழங்க சம்மதித்திருக்கிறார்.

கண்ணே கலைமானே படத்தை முடித்ததும் ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better