Search
Thursday 24 January 2019
  • :
  • :

சீமராஜா படத்தின் முதல் நாள் வசூல் 7 கோடி?

சீமராஜா படத்தின் முதல் நாள் வசூல் 7 கோடி?

வருத்தப்படாத வாலிபர்சங்கம், ரஜினி முருகன் படங்களைத்தொடர்ந்து பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’.

சமந்தா கதாநாயகியாக நடித்த இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியன் நடித்திருக்கிறார்.

ரீ எண்ட்ரி கொடுத்துள்ள சிம்ரன் மலையாள நடிகர் லால் ஜோடியாக நடித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியான இப்படத்துக்கு ரசிகர்களிடையே பாசிட்டிவ்வான ரெஸ்பான்ஸ் இல்லை. ஊடகங்களின் விமர்சனங்களும் ‘சீமராஜா’ படத்துக்கு சாதகமாக இல்லை.

இத்தனைக்கும் விளம்பரத்துக்கு மட்டும் 8 கோடி செலவிடப்பட்டது.

இந்நிலையில் சீமராஜா படத்தின் தமிழ்நாடு திரையரங்க முதல் நாள் வசூல் 13.5 கோடி என்று தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அறிவித்துள்ளார்.

“சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்” என்று ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்புக்கு மாறாக, சீமராஜா படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 7 கோடி என்று விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர்காரர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. எது உண்மை என்பது போகப்போக தெரியும்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better