Search
Sunday 24 February 2019
  • :
  • :

சிவகார்த்திகேயன் மீது சினம் கொள்ள வைத்த சீமராஜா பில்ட்அப்

சிவகார்த்திகேயன் மீது சினம் கொள்ள வைத்த சீமராஜா பில்ட்அப்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால் நடிக்கும் ‘சீமராஜா’ செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாகிறது.

‘சீமராஜா’வை தொடர்ந்து இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். எம்.ராஜேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது!

இதற்கிடையில் சீமராஜா படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

அந்த ஹோட்டலில் ஒரு பிளேட் இரவு உணவு சுமார் 4000 ரூபாய். ஏறக்குறைய 2500க்கும் மேற்பட்டடோர் அழைக்கப்பட்டனர்.

படு ஆடம்பரமாக நடைபெற்ற அந்தவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது,“சினிமாவை பொறுத்தவரையில் நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. அதே நேரம் நான் யாரைப் பார்த்தும் பயப்படுவதும் இல்லை, பொறாமைப்படுவதும் இல்லை! சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று பேசினார்!

அவரது பேச்சு மட்டுமல்ல அந்த விழாவில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பில்ட்அப்பும், சீமராஜா டிரெய்லரில் சிவகார்த்திகேயனை ரஜினியைப்போல் காட்டியதும் சக நடிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல ஹீரோக்கள் தங்கள் மனக்குமுறலை வெளிக்காட்டிக் கொள்ளாத நிலையில் அருண்விஜய் பொங்கவிட்டார்.

“யார் எல்லாம் மாஸ் காட்டுறதுன்னு விவஸ்தை இல்லாமப்போச்சு… யார் உண்மையான திறமைசாலின்னு தமிழ் ஆடியன்ஸுக்கு தெரியும்…” என்று அதிகாலை 2.10க்கு ட்வீட் பண்ணி சிவகார்த்திகேயன் மீதான தன்னுடைய எரிச்சலை வெளிப்படுத்தினார்.

அவருடைய இந்த ட்வீட் தன்னைப்பற்றிய என்பதை அறிந்த சிவகார்த்திகேயன் உடனடியாக அருண்விஜய்யை சமாதானப்படுத்தி, தனக்கு தெரியாமல் ஹேக்கர்கள் ட்வீட் பண்ணியதாக சொல்ல வைத்திருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better