Search
Friday 16 November 2018
  • :
  • :

வெற்றியைத் தேடிப்போகும் சசிகுமார்

வெற்றியைத் தேடிப்போகும் சசிகுமார்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, பரணி நடிப்பில் 2009-ல் வெளியான படம் நாடோடிகள்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளார்.

நாடோடிகள்-2 படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடோடிகள்- 2 படத்திலும் சசிகுமாரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

ஜோக்கர் பட இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சசிகுமார்.

கொடிவீரன் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய தோல்வியடைந்ததினால் உடனடியாக தனக்கு வெற்றிப்படம் தேவை என்பதால் ராஜுமுருகன் படத்தை தள்ளிவைத்துவிட்டு நாடோடிகள்-2 படத்தில் நடிக்கிறார்.

‘நாடோடிகள்’, ‘போராளி’ ஆகிய படங்களை தொடர்ந்து சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் இணையும் படம் இது.

இந்த படத்தின் அதிகார்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better