Search
Sunday 21 October 2018
  • :
  • :

சாதிய முரண் பேசும் சர்வம் தாள மயம்

சாதிய முரண் பேசும் சர்வம் தாள மயம்

தமிழகத்தில் நிலவும் சாதிய முரண்களைப் பேசும் படங்கள் அண்மைக்காலமாக வெளியாவது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் இதற்கு ஒரு உதாரணம்.

இந்நிலையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க உருவாகியுள்ள ‘சர்வம் தாள மயம்’ படமும் சாதிய முரண்களைப்பேசுகிற படம்தானாம்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ஒரு டஜன் பாடல்கள் உள்ளன. இதை எல்லாம் வைத்து இப்படத்தை இசைப்படம் என்று நினைத்தனர்.

உண்மையில் இப்படத்தின் கதையே வேறு.

ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறான் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை சார்ந்த இளைஞன். அவன் பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனுக்கு மிருதங்கம் கற்றுக்கொடுக்க மறுக்கின்றனர். கர்நாடக இசையைக் கற்றுக்கொடுக்கும் சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்!

அதிலிருந்து எப்படி மீண்டுவருகிறான் என்பதே சர்வம் தாள மயம் படத்தின் கதை.

‘மின்சாரக்கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள ‘சர்வம் தாள மயம்’ படம் 31-வது டோக்கியோ ஃபிலிம் ஃபெஸ்டிவெலில் விரைவில் பிரத்தியேகமாக திரையிடப்படவிருக்கிறது.

இந்த படத்தில் ஜி.விபிர்காஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காஷ்மீர் ஷில்லாங், ஜெய்ப்பூர் கேரளா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better