ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார். படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றபோது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, ”’சர்கார்’ படம் இதுவரை பார்க்காத ஆக்ஷன் படமாக இருக்கும். சில வசனங்கள் நான் எழுதினேனா, விஜய் சார் எழுதினாரா என்று தெரியாத அளவுக்கு அவர் பிரமாதமாக பேசி நடித்திருக்கிறார். சிலர் மட்டும் தான் அந்தக் கதாபாத்திரத்துக்கு வலிமையாகப் பொருந்திப் போவார்கள். அப்படி விஜய் சார் கச்சிதமாக இருக்கிறார். இதை நான் முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை.” என்று குறிப்பிட்டார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இப்படி பேசியதன் பின்னணி என்னவென்று சர்கார் படத்தில் பணியாற்றிய சிலரிடம் பேசியபோது கிடைத்த தகவல் இதோ…
உண்மையில் சர்கார் படத்தில் விஜய்யின் சிந்தனையில் உதித்த பல வசனங்கள் இடம்பெற்றுள்ளதாம். சில காட்சிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய வசனங்களை மாற்றி தான் விரும்பிய வசனங்களை சேர்த்து பேசி நடித்திருக்கிறாராம் விஜய்.
அதனால்தான் சர்கார் இசைவெளியீட்டுவிழாவில். சில வசனங்கள் நான் எழுதினேனா, விஜய் சார் எழுதினாரா என்று தெரியாத அளவுக்கு என்று குறிப்பிட்டு பேசினாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஆக.. சர்கார் படத்தில் விஜய் எழுதிய அரசியல்சரவெடி வசனங்கள்…