Search
Wednesday 16 January 2019
  • :
  • :

1500-க்கும் அதிகமான திரைகளில் சர்கார்

1500-க்கும் அதிகமான திரைகளில் சர்கார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

120 கோடி செலவில் தயாரிக்கப்பட்டடிருந்தாலும் மற்ற மீடியாக்களின் மூலம் விளம்பரப்படுத்தாமல் முழுக்க முழுக்க தங்களுடைய தொலைக்காட்சியின் மூலம் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளார்கள்.

பட வெளியீட்டுக்கு முன்பே தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் மட்டும் சுமார் 85 கோடிக்கும், உலக அளவிலான வியாபாரம் 120 கோடிக்கும் விற்கப்பட்டு 200 கோடிக்கும் மேலாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

வியாபாரத்தில் சாதனைகளை நிகழ்த்தியுள்ள ‘சர்கார்’ போலாந்து, மெக்சிகோ, நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட சுமார் 80 நாடுகளில், 1500 திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு முன்பாக வெளியான விஜய் படங்களை விட உலக நாடுகளில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் விஜய் படம் என்ற பெருமையை ‘சர்கார்’ பெறவுள்ளது.

‘சர்கார்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை அருண்பாண்டியனின் ஏபி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் நிறுவனம் இணைந்து வாங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 750 தியேட்டர்களில் வெளியாகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better