Search
Thursday 15 November 2018
  • :
  • :

‘சர்கார்’ படத்துக்கு ‘U/A’

‘சர்கார்’ படத்துக்கு ‘U/A’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் கதை சர்ச்சை தற்போதுதான் ஓய்ந்துள்ளது.

ஒரு பக்கம் கதை திருட்டு விஷயம் குறித்த பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தை, கோர்ட் கேஸ் நடந்து வந்தநிலையில் இன்னொரு பக்கம் ‘சர்கார்’ படத்தை ஏற்கெனவே முடிவு செய்தபடி நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முபக்க பிரம்மாண்டமாக வெளியிடும் வேலையும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ‘சர்கார்’ படம் எவ்வளவு நேரம் ஓடும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2 மணி 43 நிமிடங்கள் 58 விநாடிகள் ஓடும் படமாக உருவவாகி இருக்கிறது சர்கார்.

சென்சாரில் ‘சர்கார்’ படத்துக்கு ‘U/A’ சர்டிஃபிக்கேட் கிடைத்துள்ளது. அதிகவன்முறை இருப்பதன் காரணமாகவே ‘சர்கார்’ படத்துக்கு ‘U/A’ சர்டிஃபிக்கேட் வழங்கப்பட்டதாக தணிக்கை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better