Search
Thursday 18 October 2018
  • :
  • :

காலா பாடலுக்காக சந்தோஷ் நாராயணன் அடித்த ஸ்டண்ட்

காலா பாடலுக்காக சந்தோஷ் நாராயணன் அடித்த ஸ்டண்ட்

கபாலி படத்தையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ ஏப்ரல 27-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதை அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.

‘காலா’வின் ரிலீஸ் தேதி குறித்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்திற்கு இசை அமைக்கும் சந்தோஷ் நாராயணன் ‘காலா’ படம் குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.

‘காலா’ படத்தில் ரஜினிக்கான அறிமுக பாடல் 1980 காலகட்டத்து ட்யூன் மாதிரி இருக்க வேண்டுமா?

1990 – 2000 காலகட்டத்து பாடல் மாதிரி இருக்க வேண்டுமா?

இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி நவீன ட்யூன்களில் வேண்டுமா?

எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா?

என்று ரசிகர்களிடமே கேள்விகளை முன் வைத்து ஓட்டெடுப்பு வைத்துள்ளார்!

ஒரு இசை அமைப்பாளர் தான் இசை அமைக்கும் படத்தில் எப்படிப்பட்ட அறிமுக பாடல் மற்றும் ட்யூன் வேண்டும் என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்பது இதுவே முதல் முறை என்று அவரை சிலர் பாராட்டியுள்ளனர்.

உண்மையில் காலா படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த மாதமே முடிவடைந்துவிட்டது. இன்னும் சில தினங்களில் படத்தின் ஃபர்ஸ்ட்காப்பியே தயாராகிவிடும்.

இந்நிலையில் காலா படத்தின் அறிமுகப்பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று சந்தோஷ் நாராயணன் ரசிகர்களிடம் கருத்து கேட்பது பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்கின்றனர் காலா படக்குழுவினர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better