Search
Monday 18 December 2017
  • :
  • :

சிவகார்த்திகேயனுக்கும் சந்தானத்துக்கும் இப்படி ஒரு ஏழாம்பொருத்தம்

சிவகார்த்திகேயனுக்கும் சந்தானத்துக்கும் இப்படி ஒரு ஏழாம்பொருத்தம்

சந்தானத்துக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை சிவகார்த்திகேயன். விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் சந்தானமும், சிவகார்த்திகேயனும்தான் சினிமாவில் பெரிய அளவில் க்ளிக்கானவர்கள். பல படங்களில் காமெடியனாக நடித்து அதன் பின்னர் ஹீரோவாகி இருக்கிறார் சந்தானம்.

ஆனால், தனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்து இரண்டாவது படத்திலேயே ஹீரோவாக நடிக்கத் துவங்கி, ஆறேழு படங்களிலேயே பெரிய நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதுதான் சந்தானத்தின் எரிச்சலுக்குக் காரணம்.

அதனாலேயே சிவகார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை தன் அருகில் கூட சேர்க்க மாட்டார் சந்தானம்.

சிவகார்த்திகேயனுக்கும் சந்தானத்துக்கும் இப்படி ஒரு ஏழாம்பொருத்தம் இருக்க, இந்த இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகவிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட வேலைக்காரன் படம் டிசம்பர் 22 வெளிவரவிருப்பதாக ‘ ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தானத்தின் ‘சக்கப்போடு போடு ராஜா’ படமும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயனை நேரடியாக வம்புக்கு இழுத்திருக்கிறார் சந்தானம்.

இன்னொருபக்கம் சந்தானம் படம் வெளிவருவது சிவகார்த்திகேயன் தரப்பை பதட்டமடைய வைத்திருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better