Search
Wednesday 26 September 2018
  • :
  • :

சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா

சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா

மன்மதன் படத்தில் காமெடியனாக அறிமுகமான சந்தானத்துக்கு ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தார் இயக்குநர் எம்.ராஜேஷ்.

இவர் இயக்கிய ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என எல்லாப் படங்களிலும் சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

எம். ராஜேஷ் கடைசியாக இயக்கிய படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதால், இந்தப்படத்தில் மட்டும் நடிக்கவில்லை.

தற்போது சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் எம்.ராஜேஷ்.

இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால், ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்தவகையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடுமையான பணநெருக்கடியால் இருப்பதால் இந்தப் படத்தை தயாரிப்பதிலிருந்து பின்வாங்கிவிட்டது.

எனவே, இந்தப் படத்தை பிரபுதேவா மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கின்றனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better