Search
Monday 18 December 2017
  • :
  • :

சர்வர் சுந்தரத்தை ஓவர்டேக் பண்ணும் சக்க போடு போடு ராஜா

சர்வர் சுந்தரத்தை ஓவர்டேக் பண்ணும் சக்க போடு போடு ராஜா

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய கே.ஆர்.பிலிம்ஸ் பெரும் நஷ்டத்தில் இருப்பதால், சர்வர் சுந்தரம் படத்தின் வெளியீட்டுக்கு முன் தயாரிப்பாளருக்குக் கொடுக்க வேண்டிய தொகையை செட்டில் பண்ணவில்லை.

அதனால் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த படம் தவிர மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி, விடிவி கணேஷ் தயாரிப்பில் ‘சக்க போடு போடு ராஜா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் சந்தானம்.

‘லொள்ளு சபா’ புகழ் சேதுராமன் இயக்கி வரும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு சிம்பு இசை அமைக்கிறார்.

அனிருத், யுவன் சங்கர் ராஜா, டி.ரஜேந்தர், உஷா ராஜேந்தர், உன்னி கிருஷ்ணன் மகன் வாசுதேவ் ஆகியோர் பாடல்களை பாடியுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

பிரச்சனைகள் தீராமல் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனால் ‘சக்க போடு போடு ராஜா’வை முதலில் ரிலீஸ் பண்ண சொல்லிவிட்டாராம் சந்தானம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better