Search
Saturday 22 September 2018
  • :
  • :

‘சாமி-2’ தயாரிப்பாளரின் நம்பிக்கை…

‘சாமி-2’ தயாரிப்பாளரின் நம்பிக்கை…

சி3 படத்தை அடுத்து விக்ரம், கீர்த்தி சுரேஷ் முதலானோர் நடிக்கும் ‘சாமி-2’ படத்தை இயக்கி வருகிறார் ஹரி.

கடந்த வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டது.

இன்னும் சில காட்சிகளும், மூன்று பாடல் காட்சிகளையும் படமாக்கினால் சாமி-2 இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம்.

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘திருநெல்வேலி ஹல்வா டா…’ ஸ்டைலில் ஒரு குத்துப் பாடலை சாமி-2 படத்திலும் வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

‘திருநெல்வேலி ஹல்வா டா…’ பாடலை சாமி’ படத்துக்காக படமாக்கிய அதே லொகேஷ்ன்களிலேயே இந்தப்பாடலையும் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் ஹரி.

‘சாமி’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையிலும் ‘சாமி-2’ படத்துக்கு வெற்றி கிடைக்கும் என்ற அசாத்திய நம்பிக்கையில் இரண்டாம் பாகத்தை ஷிபு தமீனின் ‘தமீன் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

தயாரிப்பாளரின் நம்பிக்கையை ‘சாமி-2’ படம் காப்பாற்றுமா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better