Search
Tuesday 25 September 2018
  • :
  • :

மீண்டும் தமிழ்ப்பட வாய்ப்பு…! சந்தோஷத்தில் ‘சரபம்’ சலோனி…!

மீண்டும் தமிழ்ப்பட வாய்ப்பு…! சந்தோஷத்தில் ‘சரபம்’ சலோனி…!

சிரிப்பு நடிகர் அனுமோகனின் மகன் அருண்மோகன் இயக்கிய ‘சரபம்’ படத்தில் கதாநாயகியாக, அதுவும் இரட்டை வேடங்களில் நடித்து தமிழ்ரசிகர்களிடம் அறிமுகமானவர் சலோனி.

முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார் சலோனி.

என்ன பிரயோஜனம்? ‘சரபம்’ அட்டர் ப்ளாப் படமாகிப்போனதால் சலோனிக்கு தமிழில் படங்கள் இல்லாமல் போனது.

அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் அழைப்பை ஏற்று அவ்வப்போது சென்னை வந்து தங்கியும், அவர் அடுத்த வாய்ப்பை வழங்கவில்லை.

எனவே ஏமாற்றமடைந்த சலோனி இனி தமிழ்ப்படமே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் அவரே எதிர்பாராத வகையில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சலோனிக்கு கிடைத்திருக்கிறது.

பிரபுதேவா தமிழில் தயாரிக்கும் 3 படங்களில் ஒன்றான ‘விநோதன்’ படத்தில்தான் இன்னொரு நாயகியாக நடிகை சலோனியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசரிவேலனின் பேரனான அறிமுக நாயகன் வருண் நடிக்கும் இப்படத்தில் வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

புதுமுக இயக்குநர் விக்டர் ஜெயராஜ் இயக்கும் இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்படத்தின் மூலம் தனக்கு மீண்டும் தமிழ்சினிமாவில் புகழ் வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் சந்தோஷத்திலும் இருக்கிறார் சலோனி.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better