Search
Monday 23 April 2018
  • :
  • :

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் கதை இதுதான்…

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் கதை இதுதான்…

படம் வெளியாகும் வரை அதன் கதை வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார் மணிரத்னம்.

இன்றைய இண்டர்நெட் உலகில் அதற்கு வாய்ப்பில்லை என்றாலும், அதையும் மீறி ‘காற்று வெளியிடை’  படம் குறித்து ரகசியம் காத்து வந்தார் மணிரத்னம்.

சென்னை, லடாக், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றாலும், காற்று வெளியிடை படத்தின் கதைக்களம் காஷ்மீர் என்ற தகவல் ஏற்கனவே அடிபட்டது.

அதை உறுதி செய்வதாக இருந்தது காற்று வெளியிடைபடத்தின் ட்ரெய்லர்.

அதன் அடிப்படையில், ‘காற்று வெளியிடை’ படத்தில் ‘ரோஜா’ படத்தின் சாயல் இருக்கிறது. ஒருவேளை ரோஜா-2 ஆகவும் இருக்கலாம் என்று கருத்து பரவலாக எழுந்தது.

சமீபத்திய ஒரு தகவல் இந்த சந்தேகத்தை ஏறக்குறைய உறுதிபடுத்துவதுபோல் உள்ளது.

காற்று வெளியிடை படம் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டிற்காக பிரிட்டிஷ் தணிக்கைக் குழுவுக்கு அண்மையில் காற்று வெளியிடை படம் திரையிடப்பட்டது.

படத்துக்கு,12ஏ என்ற  தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ள பிரிட்டிஷ் தணிக்கைக் குழு, இப்படத்தின் கதை குறித்து தங்களுடைய இணையத்தில், ”காற்று வெளியிடை ஒரு ராணுவ பைலட் போர்க் கைதியாக பிடித்து வைக்கப்படுகிறார். இந்தியாவில் மருத்துவராக இருக்கும் தனது காதலியைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளது அதோடு, காற்று வெளியிடை படத்தை ரொமாண்டிக் டிராமா  என்றும் வகைப்படுத்தி உள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், காற்று வெளியிடை படத்தை இன்னொரு ரோஜா என்றே சொல்ல வேண்டும் போலிருக்கிறது. அல்லது ரோஜா-2.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better