Search
Sunday 24 February 2019
  • :
  • :

நெருக்கடி கொடுக்கும் பைனான்சியர்கள்

நெருக்கடி கொடுக்கும் பைனான்சியர்கள்

சிவகார்த்திகேயனின் நண்பரும் ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான ஆர்.டி.ராஜாவுக்கு சீமராஜா பட வெளியீட்டின்போது மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

அவர் தயாரித்த முந்தைய படங்களின் நஷ்டம் எல்லாம் சேர்ந்து சீமராஜா படத்தின் மீது விழுந்தது. இதனால் தற்போது 70 கோடிக்கு மேல் கடனாளியாகிப்போனார்.

அவருக்கு பக்கபலமாக இருந்த சிவகார்த்திகேயன், சீமராஜா படம் வெளியாவதற்காக 15 கோடிக்கு கையெழுத்து போட்டு கடன் வாங்கிக்கொடுத்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனும் ஆர்.டி.ராஜாவும் பிரிந்துவிட்டனர். இருவரும் பேசிக்கொள்வது கூட இல்லை.

ஆர்.டி.ராஜாவுக்கு சிவகார்த்திகேயனின் சப்போர்ட் இல்லை என்ற தகவல் படத்துறையில் பரவியதும் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தன்னுடைய செல்நம்பரை மாற்றிவிட்டார் ஆர்.டி.ராஜா. அவருடைய புதிய நம்பர் சிவகார்த்திகேயன் உட்பட யாருக்குமே தெரியாது என்பதுதான் ஆச்சர்யமான தகவல்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better