Search
Wednesday 23 May 2018
  • :
  • :

ஸ்டிரைக்குக்கு ஓகே சொன்ன ரஜினி

ஸ்டிரைக்குக்கு ஓகே சொன்ன ரஜினி

இந்திய சினிமாவிலேயே 2018 ஆம் வருடத்தின் மிகப்பெரிய படம் 2.0.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணியில் தொய்வு ஏற்பட்டதால் இந்த வருடத்தின் பின்பாதியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

தயாரிப்பு தரப்பிலிருந்து ‘2.0’ படத்தின் வெளியீடு பற்றியோ, படம் தாமதமாவது பற்றியோ அதிகாரப்பூர்வமாக எந்த வித செய்தியும் இதுவரை வரவில்லை.

ஆனாலும் ரஜினி நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

‘கபாலி’யை தொடர்ந்து ரஜினிகாந்தும், பா.ரஞ்சித்தும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் என்பதால் ‘காலா’வை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்நிலையில் தற்போது நடைபெறும் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படம் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் ரஜினியின் கவனத்துக்குக் கொண்டுபோனாராம். அதற்கு ரஜினி சம்மதம் சொன்ன பிறகே வேலைநிறுத்தத்தை நீட்டிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better