Search
Sunday 23 September 2018
  • :
  • :

ராஜீவ்மேனனால் விரக்தியடைந்த நடிகை

ராஜீவ்மேனனால் விரக்தியடைந்த நடிகை

ஸ்ரீகணேஷ் இக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் – ‘8 தோட்டாக்கள்’.

பல தரப்பினராலும் பாராட்டப்பட்ட இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி. பத்துக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தவர் இவர்.

இப்போது இவர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ படத்தில் நடித்துள்ளார்.

சர்வம் தாள மயம் படம் விரைவில் திரைக்குவரவிருக்கும்நிலையில், அப்படம் தயாரிப்புநிலையில் இருக்கும்போதே மற்றொரு தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தை ‘நாளைய இயக்குனர்’ புகழ் ராசு ரஞ்சித் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில்தான் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார்! இந்த படத்தில் மூன்று கதாநாயகன்களாக இயக்குநர் ராசு ரஞ்சித், தாஸ், சந்தீப் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஆக்‌ஷனும், எமோஷனும் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

சர்வம் தாளமயம் படம் வெளி வந்த பிறகு அபர்ணா பாலமுரளிக்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் தேடி வரும் என்று ராஜீவ்மேனனே சொன்னாராம். அதே நேரம் சர்வம் தாளமயம் படம் திரைக்கு வராமலே இருப்பதால் அந்த விரக்தியில்தான் புதுமுக ஹீரோக்கள் நடிக்கும் படத்தை ஒப்புக்கொண்டாராம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better