Search
Tuesday 19 December 2017
  • :
  • :

செப்டம்பர் 17 அன்று ‘ரஜினிமுருகன்’ படம் ஏன் ரிலீஸ் இல்லை? வெளிவராத பின்னணி தகவல்கள்…!

செப்டம்பர் 17 அன்று ‘ரஜினிமுருகன்’ படம் ஏன் ரிலீஸ் இல்லை? வெளிவராத பின்னணி தகவல்கள்…!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன் – இயக்குநர் பொன்ராம் – இசையமைப்பாளர் இமான் மீண்டும் இணைந்துள்ள ‘ரஜினிமுருகன்’ படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, தடைகளைத்தாண்டி செப்டம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்தது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படத்தில் ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் நண்பராக நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார் சூரி.

செப்டம்பர் 17 அன்று படம் வெளிவருவதை முன்னிட்டு கடந்த வாரம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்தனர்.

செப்டம்பர் 17 அன்று ‘ரஜினிமுருகன்’ படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றநிலையில் தற்போது திடீர் திருப்பமாக செப்டம்பர் 17 அன்று படம் வெளிவரவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

என்ன காரணம்?

ஈராஸ் நிறுவனத்துக்கு 98 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் லிங்குசாமி என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் மும்பை சென்று ஈராஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து 98 கோடியில் வட்டித்தொகையாக சில கோடிகளை குறைத்துக் கொள்ளும்படி கேட்டார்களாம்.

அதற்கு ஈராஸ் மறுத்துவிட்டது.

இன்னொரு பக்கம், ‘ரஜினி முருகன்’ படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 35 கோடிக்கு வாங்கி உள்ளது வேந்தர் மூவிஸ்.

அதை பைனான்ஸியர் மதுரை அன்புவின் கடனை அடைப்பதற்காக கொடுத்துவிடும்படி சொல்லிவிட்டாராம் லிங்குசாமி.

‘உத்தமவில்லன்’ படத்துக்கு உதவிய ஞானவேல்ராஜாவோ 35 கோடியை தனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறாராம்.

இதுபோன்ற தீராத பிரச்சனைகள் காரணமாகவே ‘ரஜினி முருகன்’ படம் செப்டம்பர் 17 அன்று ரிலீஸ் ஆகவில்லையாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better