Search
Wednesday 17 October 2018
  • :
  • :

‘ரெயின் டிராப்ஸ்’ சமூக அமைப்பின் “பெண் சாதனையாளர் விருதுகள்” விழா

‘ரெயின் டிராப்ஸ்’ சமூக அமைப்பின் “பெண் சாதனையாளர் விருதுகள்” விழா

‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சார்பில் ஆறாம் ஆண்டு நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா, சென்னையில் உள்ள ராணிசீதை மஹாலில் நடைபெற்றது

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும்.

ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள்.

இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக ‘பெண்சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை சமீபத்தில் நடத்தினர்.

இந்த விழா கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டுகொண்டிருக்கும், ஆஸ்கார் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா தலைமை தாங்கி நடத்தினார்.

இந்த வருடம், ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருதை பெற்றவர்கள், மூத்த நாட்டுப்புற இசை கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லட்சுமிக்குட்டி அம்மா என்ற 74வயதான ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியம் பார்க்கும் மூதாட்டி ஆவார்.

பெண் சாதனையாளர் விருதுகளை பெற்றவர்கள் இந்தியாவின் பெண்கமாண்டோ பயிற்சியாளர் சீமா ராவ், சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தான்ய மேனன், அருவி கதாநாயகி அதிதி பாலன், இடுகாட்டு பராமரிப்பு மேலாளர்பிரவீனா சாலமன், தொழிலதிபர் மற்றும் கல்வியாளர் விமலா பிரிட்டோ, ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் ஸ்ரீமதி கேசன், கால்பந்து விளையாட்டுவீராங்கனை சங்கீதா, ஊடக பத்திரிகையாளர் அசோகா வர்ஷினி, மன்வாசனை மேனகா திலக்ராஜன், மற்றும் சிறப்பு அங்கீகாரத்தை பெற்றவர் பின்னணிபாடகி வைக்கம் விஜயலட்சுமி.

காவல்துறை தலைமையக இணை ஆணையர் சரவணன், நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ், இசையமைப்பாளரும், ரெயின் டிராப்ஸ் நிறுவனத்தின்நல்லெண்ண தூதராக இருக்கும் ஏ.ஆர்.ரெஹானா, சத்யபாமா பல்கலை கழகத்தின் இயக்குநர் டாக்டர் மரியசீனா ஜான்சன், இசையமைப்பாளர் பவதாரணி, விஜி பி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் வி. ஜி. சந்தோஷம், கவிதா ராமு இ.ஆ.ப, சென்னை வண்டலுார் உயிரியல் பூங்கா துணை இயக்குனர் சுதாராமன், ‘எக்ஸ்னோரா’ நிறுவனத்தின் நிறுவனர் எம் பி நிர்மல், பத்ம ஸ்ரீ டாக்டர் டி வி தேவராஜன், நாச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் சி கே குமரவேல் மற்றும் வீனா குமரவேல், உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

“ஒவ்வொரு துறையிலும் இருக்கும் திறமையாளர்களை அடையாளம் கண்டு கொண்டு, அவர்களை கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை கொள்கிறது.

‘Edupreneur Awards’ மற்றும் ‘Change Maker Awards’ போல இந்த ‘பெண் சாதனையாளார்களை கௌரவிக்கும் விழாவையும்’, சர்வேதச மகளிர் தினத்தைமுன்னிட்டு வருடா வருடம் நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

நாங்கள் வியாசர்பாடியில் உள்ள ‘சீர்ஸ் கேர்ள்ஸ் ஹோமை’ தத்தெடுத்துஇருக்கின்றோம்.

இங்கு இருக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் படிப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு எங்களின் ‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்புபக்கபலமாய் இருக்கும்” என்று கூறுகிறார் ‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அரவிந்த் ஜெயபால்.

சென்ற வருடம் இந்த கௌரவ விருதுகளை பெற்ற சிலர் – கர்நாடக மாநிலத்தை சார்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் 106 வயதான ‘சாலுமரடதிம்மக்கா’, இந்தியாவின் மூத்த ‘களரிபயட்டு’ பெண் கலைஞர் மீனாக்ஷி அம்மாள், ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ்பெண்மணி சாந்தி சௌந்தராஜன், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகி நயன்தாரா, தென்னக ரயில்வேயில் முதல் பெண் ஓட்டுநர் சி விதிலகவதி , ஐஎஸ்ஆர்ஓ முதல் பெண் இயக்குநர் டி கே அனுராதா.
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better