Search
Tuesday 11 December 2018
  • :
  • :

புரியாத புதிர் நஷ்டம்… விஜய்சேதுபதியிடம் வரும் பஞ்சாயத்து

புரியாத புதிர் நஷ்டம்… விஜய்சேதுபதியிடம் வரும் பஞ்சாயத்து

விஜய்சேதுபதி நடிப்பில் பல வருடங்களுக்கு முன் மெல்லிசை என்ற பெயரில் தொடங்கப்பட்ட படம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

அந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் ஜே.எஸ்.கே. படத்தின் பெயரை ‘புரியாத புதிர்’ என்று மாற்றி புதிய படத்தைப்போல் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிட்டார்.

விஜய்சேதுபதி நடித்த விக்ரம்வேதா படம் கமர்ஷியலாக வெற்றிபெற்றிருந்தநிலையில், அந்த வெற்றியை அறுவடை பண்ணும் நோக்கத்தில் பல வருடங்களாக வெளிவராமல் கிடந்த ‘புரியாத புதிர்’ படத்தை அவசரஅவசரமாக வெளியிட்டார்.

ஏற்கனவே பல்வேறு பஞ்சாயத்துகள் இருந்ததால் ஏரியாவாரியாக படத்தை வாங்கியவர்களிடமும், தியேட்டர்காரர்களிடமும் பணத்தை வாங்கி செட்டில் பண்ணிவிட்டு ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிட்டார்.

விக்ரம் வேதா எதிர்பார்ப்பில் வந்தவர்களுக்கு புரியாத புதிர் ஏமாற்றத்தைக் கொடுக்க இரண்டாவது நாளே தியேட்டர்கள் வெறிச்சோடின.

அதன் காரணமாக புரியாத புதிர் படத்துக்கு முன் பணம் கொடுத்தவர்கள் நஷ்டமடைந்தனர்.

நஷ்டத்தை திருப்பிக் கேட்டால், அடுத்து அண்டாவக் காணோம் படத்தை வெளியிடும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிறாராம்.

புரியாத புதிர் படத்தின் ஒரு ஏரியாவின் விலைதான் அண்டாவக் காணோம் படத்தின் மொத்த பட்ஜெட். இந்த லட்சணத்தில் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அண்டாவக் காணோம் படத்தில் எப்படி ஈடுகட்ட முடியும் என்ற கவலையில் உள்ளனர் – புரியாத புதிர் படத்தில் நஷ்டப்பட்டவர்கள்.

இந்த விவகாரத்தை விஜய்சேதுபதியிடம் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better