Search
Thursday 24 May 2018
  • :
  • :

சிவகாசி பட்டாசு… – ஸ்ரீதேவிக்கு பட்டம் கொடுத்த விஜய்…!

சிவகாசி பட்டாசு… – ஸ்ரீதேவிக்கு பட்டம் கொடுத்த விஜய்…!

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘புலி’.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

இதில் படத்தில் நடித்த ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, தம்பி ராமைய்யா மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக விஜய்யை வைத்து படம் இயக்கிய பல இயக்குநர்கள் கலந்து கொண்டார்கள்.

‘புலி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்…

“ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சரித்திர படத்தில் நடிக்கணும்னு ஆசை இருந்துட்டேயிருந்துச்சு. அந்த நேரத்துல இயக்குநர் சிம்புதேவன் என்கிட்ட இந்த கதையை கொண்டு வந்தாரு.

நாம உயிரோட இருக்குற வரைக்கும் அடுத்தவங்களுக்கு தீமை செய்யாமல் இருந்தாலே போதும், எனக்கு யாரையும் உண்மையா வெறுக்க தெரியுமே தவிர பொய்யாக நேசிக்க தெரியாது.

இன்னைக்கு இருக்குற ஹீரோக்களிடம் அண்ணனாக பழகிக் கொண்டிருப்பவர் பிரபு, அதேமாதிரி ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோ படத்துல வில்லனாக நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனா சுதீப் இதுக்கு ஒத்துக்கிட்டாரு. அவருடைய பெருந்தன்மைக்கு என்னுடைய நன்றி.

அடுத்து ஹீரோ நட்டி, ஹீரோவாக சதுரங்க வேட்டை ஆடினாரு, இப்ப கேமரா மூலமாக ‘புலி’ வேட்டை ஆடியிருக்கிறார்.

கடைசியாக நம்ம ஊர் சிவகாசி பட்டாசு ஸ்ரீதேவி அவர்களுக்கும் பெரிய நன்றி…

அடுத்து ஒருத்தரை பற்றி நான் சொல்லியே ஆகனும், அவரை நான் சந்திக்கும்போதெல்லாம் எப்பவுமே ஒரு எனர்ஜி அவர்கிட்ட தெரியும், அதை பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

இப்ப இந்த படத்துல தாரை தப்பட்டையேலாம் வச்சு புலியை விரட்டுவாங்க, ஆனா இப்ப தாரை தப்பட்டையெல்லாம் வைத்து புலியை ஆட வச்சிருக்காரு தேவிஸ்ரீபிரசாத் அவருக்கு என் நன்றி மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

எனக்கு என் ரசிகர்களுக்கு மற்றவர்களை வாழவச்சு அழகு பார்க்குறதுதான் பிடிக்கும் என்ன நண்பா நான் சொல்றது சரியா. மேலும் இந்த விழாவுக்கு வந்த அனைவருக்கு நன்றி. இவ்வளவு தூரம் வந்து வாழ்த்தியதற்கும் முக்கியமாக டி.ஆருக்கும் என் நன்றி.”




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better