Search
Sunday 20 January 2019
  • :
  • :

இன்னும் இரண்டு தினங்களில் ‘ஏன்டி ஏன்டி’…

இன்னும் இரண்டு தினங்களில் ‘ஏன்டி ஏன்டி’…

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப்பை வைத்து சிம்புதேவன் இயக்கத்தில்  ஷிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்துள்ள  உருவாகி வரும் ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
ஃபர்ஸ்ட்லுக் வெளியான சில நாட்களிலேயே, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது.
இதுவே சாதனையாக கருதப்படுகிறது.
இதை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கும் விஜய் ரசிகர்களுக்கு தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘புலி’ படப்பாடல்களில் ஒன்றான ‘ஏன்டி ஏன்டி…’ என்ற பாடலின் புரமோ டீஸர் வரும் 24 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.
விஜய், ஸ்ருதிஹாசன் இணைந்து பாடியுள்ள இந்தப்பாடல் ‘புலி’ படத்தின் ஹைலைட் என்கிறது ‘புலி’ வட்டாரம்.
அது மட்டுமல்ல, இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் ரொமான்டிக் பாடலாகவும் ‘ஏன்டி ஏன்டி’ பாடல் இடம்பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
‘புலி’ படம் செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகிறது.



Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better