Search
Monday 17 December 2018
  • :
  • :

அமெரிக்காவில் 150 திரையரங்குகளில் ‘புலி’…!

அமெரிக்காவில் 150 திரையரங்குகளில் ‘புலி’…!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாவதை முன்னிட்டு இன்று முதல் முன்பதிவு தொடங்கிவிட்டது.

ஃபேன்டஸி படமான ‘புலி’ திரைப்படம் 154 நிமிடங்கள் அதாவது ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் ஓடக்கூடியதாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் மொத்தம் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘புலி’ படம் வெளியாகிறது.

விஜய்யின் கேரியரிலேயே அதிக அளவிலான திரையரங்குகளில் திரையிடப்படவிருக்கும் படம் ‘புலி’தானாம்.

இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் குறிப்பாக அமெரிக்காவிலும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

அமெரிக்காவில் மட்டுமே கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் வெளியாகிறது ‘புலி’.

அவற்றில் 116 திரையரங்குகளில் தமிழிலும் 34 திரையரங்குகளில் தெலுங்கிலும் ‘புலி’ படம் வெளியாகிறது.

விஜய் படங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவில் இதுவரை வெளியானதில், ‘புலி’ படம்தான் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாகிறதாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better